in

புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்

 

தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் இயற்றிய மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசு 2020-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்த நிலையில் தொழிற்சங்கங்கள் நூறாண்டு காலம் போராடி பெற்ற 44 தொழிலாளர் நல சட்டங்களை நான்கு தொகுப்புகளாக திருத்தம் செய்து அறிவித்துள்ளது.

இந்த சட்டத்தை அமுல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து,தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் இயற்றிய மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி சுதேசி மில் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

What do you think?

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் குழந்தைப் பருவ புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு

கிழாய் கிராமத்தில் ரூ 7.5 லட்ச மதிப்பீட்டில் பேருந்து பயணிகள் நிழற்குடை