in

புதுச்சேரி..பள்ளி சிறுவன் கோயில் குளத்தில் மூழ்கி இறப்பு..

புதுச்சேரி..பள்ளி சிறுவன் கோயில் குளத்தில் மூழ்கி இறப்பு..

தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புதுச்சேரி உழவர்கரையில் தங்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு வீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மன் கோயில் அருகே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் லோகநாதன் மற்றும் விஜயா ஆகியோரின் மகன் குணா வயது (11) பள்ளி விடுமுறை காரணமாக அவர்களிடம் வந்துள்ளார்.

மதியம் கோயில் குளத்தருகே மூவரும் சாப்பிட்ட நிலையில் சிறுவன் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தான். மாலை 4 மணிக்கு வீடு செல்வதற்கு புறப்படும் போது சிறுவன் காணவில்லை.குளத்தருகே சென்று பார்த்த போது நீரில் மூழ்கி சிறுவன் இறந்திருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

What do you think?

புதுச்சேரியை முத்தியால்பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சிபிஎஸ்இ பொது தேர்வு தேர்ச்சி பெற வேண்டி ஸஹஸ்ர நாம அர்ச்சனை

புதுச்சேரி….எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி கடற்கரை சாலையில் நடைபயணம்