புதுச்சேரி தற்காலிக பேருந்து நிலையத்தில் புழுதி காற்று பரப்பதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர்,கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
புதுச்சேரி பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதியதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக பேருந்து நிலையம் கடலூர் சாலை ஏ.எப்.டி மைதானத்தில் அமைக்கப்பட்டு பேருந்துகள் வந்து செல்கின்றன.
இந்த பேருந்து நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வெளியூர் செல்வதும் மற்றும் பள்ளி கல்லூரிகள் செல்வது என பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் பொது மக்களின் வருகைக்கு ஏற்ப பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் வசதி, குடிநீர் வசதி,கழிவறை வசதி என எதையும் செய்து தரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் மழை நேரங்களில் தற்காலிக பேருந்து நிலையம் சேரும் சகதியுமாகவும், வெயில் காலங்களில் புழுதி காற்று பறந்து மோசமான நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பேருந்து நிலையத்திலிருந்து புழுதிகள் சாலையில் பரவுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே பருவ மழை தொடங்கி உள்ளதால், உடனடியாக தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கும் இடவசதியும், மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.