புதுச்சேரி…தனது ஆசிரியர் காலில் விழுந்து பூங்கொத்தை பெற்று கொண்ட மத்திய நிதி அமைச்சர்…
புதுச்சேரி அரவிந்தர் சொசைட்டியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திருச்சியில் ஹோலி கிராஸ் பள்ளியில் படித்த போது ஆசிரியராக இருந்த சபிதா என்பவர் மூலம் பூங்கொத்து கொடுக்கப்பட்டது. பூங்கொத்து பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
திருச்சி ஹோலி கிராஸ் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சபிதா ஓய்வு பெற்ற பிறகு புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் வந்து ஆசிரமவாசியாக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் அவர் இந்த விழாவில் பங்கேற்று பூங்கொத்தை கொடுத்தார்.
ஒரு மாணவியாக இருந்த நிர்மலா சீதாராமன் 1974 ஆம் ஆண்டு பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் மிசா குறித்து கேள்வி எழுப்பியதற்கு யாரும் பதிலளிக்கவில்லை.. உடனடியாக பதில் அளித்தது நிர்மலா சீதாராமன் தான்..
பள்ளி பருவத்திலே அவர் திறமையுடன் இருப்பார்.. அவருக்கு பூங்கொத்து கொடுத்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. பூங்கொத்தி பெற்றுக் கொண்ட அவர் எனது காலில் விழுந்து ஆசை பெற்றார்.. பதவியில் பெரிய இடத்தில் அவர் இருந்தாலும் ஒரு ஆசிரியருக்கு மாணவர் செய்ய வேண்டிய கடமை அவர் செய்துள்ளார் என பெருமிதத்துடன் சபிதா குறிப்பிட்டார்..