in

புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

புதுச்சேரி அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள மாங்குளம் என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன, இந்த பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக சரியான முறையில் தண்ணீர் வருவதில்லை என பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகளும் அரசுக்கு கோரிக்கையும் கொடுத்து வந்தனர். ஆனால் இதுவரைக்கும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பத்து கண்ணு-சேதராப்பட்டு சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் சாராயக் கடைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் அரசு. மக்களுக்கு அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் கொடுக்காமல் வஞ்சிக்கிறது. தங்கள் பகுதிக்கு உடனடியாக தண்ணீர் தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது…

அதன் பிறகு வில்லியனூர் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உடைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது சீர் செய்யப்பட்டது…

What do you think?

புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

புதுச்சேரி அளவில் பேஷன் ஷோ கண்கவர் உடையில் வந்து அசத்திய கல்லூரி மாணவ-மாணவியர்