புதுச்சேரி….எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி கடற்கரை சாலையில் நடைபயணம். சிலிண்டர் வினியோக ஊழியர்கள் பங்கேற்பு
இந்தியன் ஆயில் கழகம் சார்பில் எரிபொருள் இரு வாரம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.புதுச்சேரியிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை இக்கழகம் நடத்துகிறது.அந்த வகையில் கடற்கரை சாலையில் எரிபொருள் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.இந்தியன் ஆயில் கழகத்தின் துணைப் பொது மேலாளர் சுபோத் குமார் சாகு,புதுச்சேரி மண்டல மேலாளர் சம்பத் குமார் ரெட்டி ஆகியோர் துவக்கி வைத்தார்.
இதில் புதுச்சேரியின் சமையல் எரிவாயு வினியோகிஸ்தர்கள் மற்றும் வீடுகளுக்கு
சிலிண்டர் வினியோக ஊழியர்கள் பங்கேற்றனர்.வாகனங்களில் எரிபொருள் சேமிப்பு,வீடுகளில் உணவகங்களில் சமையல் எரிவாயு சேமிப்பு,பேட்டரி வாகன பயன்பாடு போன்றவற்றை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி வந்தனர்.
பேட்டி..1.சம்பத் குமார் ரெட்டி,;புதுச்சேரி மண்டல மேலாளர் இந்தியன் ஆயில் கழகம்..
(மத்திய அரசின் பெட்ரோலிய துறையின் வழிகாட்டுதலின் படி 15 நாட்களுக்கு பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு சிக்கனத்திற்கு விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.தற்போது இருக்கும் எரி பொருள் வளம்
என்றாவது தீர்ந்து விடும்.அதனை மனதில் கொண்டு மக்கள் சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தினார்…)
2.சுபோத் குமார் சாகு,துணைப் பொது மேலாளர் இந்தியன் ஆயில் கழகம்..
(எரி பொருள் சிக்கனத்தை வலியுத்தும் செய்யும் நேரத்தில் பேட்டரி வாகன பயன்பாட்டி அதிக அளவில் வலியுறுத்துகிறோம்..குறைந்த அளவிலான சிக்கனம் மிக பெரிய அளவில் எரி பொருளை சேமிக்கிறது..வாகனங்களின் டயர்களுக்கு சரியான காற்றை பராமரிப்பது,அதிவிரைவாக வாகனங்களை இயக்க கூடாது,சமையல் அடுப்பிற்கான Burnerயை அடிக்கடி சுத்தப்படுத்துவது, சமையலுக்கான பொருட்களை தயார்படுத்தி விட்டு அடுப்பை பற்ற வைப்பது,பிரிட்ஜ்ஜில் இருந்து எடுக்கும் உணவு பொருளை உடனே அடுப்பி வைக்க கூடாது என எரி பொருள் சிக்கனத்திற்கான ஆலோசனைகளை தெரிவித்தார்)