in

புதுச்சேரி அளவில் பேஷன் ஷோ கண்கவர் உடையில் வந்து அசத்திய கல்லூரி மாணவ-மாணவியர்

புதுச்சேரி..தமிழக – புதுச்சேரி அளவில் பேஷன் ஷோ…கண்கவர் உடையில் வந்து அசத்திய கல்லூரி மாணவ-மாணவியர்..

புதுச்சேரி அரியூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பேஷன் ஷோ நடைபெற்றது.கல்லூரியில் படிப்புடன் மாணவர்கள் தங்களது தனித்திறனை வளர்க்கும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. இதில் நடைபயிற்சி, சீர்படுத்தும் முறை, தோரணையின் வழி, தோல் பராமரிப்பு மற்றும் பல்துறையிலிருந்து சட்ட ஆதரவு மற்றும் சுய வளர்ச்சி போன்ற வகுப்புகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு பேஷன் போட்டியாளர் சங்கத்தின் மூலமாக சிறந்த அழகன்,சிறந்த அழகி ஆகியோருக்கான போட்டி நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் பிரதீப் தேவநேயன் துவக்கி வைத்தார்.

மாணவர்கள் நவீன உடை அணிந்தும் மாணவியர் நவநாகரீக உடை அணிந்தும் போட்டியில் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தினார்கள்.
இறுதியாக சிறந்த அழகன்,சிறந்த அழகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் கிரீடம் வழங்கப்பட்டது.

What do you think?

புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

புதுச்சேரியில் சுமார் 250 ஆண்டுகள் பழமையான கவர்னர் மாளிகைசேதம்