சட்ட மன்றதுக்கு பூட்டு பஞ்சாப் முதல்வர் கிண்டல்
பஞ்சாப் சட்டப் பேரவையில் இருந்து எதிர்க்கட்சி (காங்கிரஸ்) எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்யாமல் இருக்க வாயில் கதவை பூட்டச் சொல்லி, பேரவைத் தலைவரிடம் முதல்வர் பகவந்த் மான் பூட்டு ஒன்றை அளித்தார்.
அவரது இந்த கிண்டலான செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றது வருகிறது.
மாநிலப் பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் உரையாற்றியபோது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு, அவரை பேச விடாமல் இடையூறு செய்தனர். பின்னர், அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேறாமல் இருக்க வாயில் கதவை பூட்டச் சொல்லி, பேரவைத் தலைவரிடம் முதல்வர் பகவந்த் மான் பூட்டு ஒன்றை அளித்தார்.
இதையடுத்து, எதிர்க்கட்சியினரை அவைக்குள் பூட்ட பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி, அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இது வெறும் “அடையாள’ நடவடிக்கைதான் என்று பேரவைத் தலைவர் விளக்கமளித்தார்.
அப்போது, முதல்வர் பகவந்த் மான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸின் தொகுதிப் பங்கீட்டை கிண்டலடித்து, பகவந்த் மான் சில கருத்துகளைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
“காங்கிரûஸ புதுப்பிக்க முடியாது’: பின்னர் விவாதத்தில் பேசிய பகவந்த் மான், “காங்கிரஸ் கட்சி மிக பழைய மாடல் காரைப் போன்றது; அதை புதுப்பிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அக்கட்சியின் தலைவர் (ராகுல் காந்தி) சத்தீஸ்கரில் அலைந்து கொண்டிருந்தார்’ என்று விமர்சித்தார்.
இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் என்ற பெயரில் ராகுல் யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், பகவந்த் மான் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் காங்கிரஸýடன் ஆம் ஆத்மியும் அங்கம் வகிக்கிறது. தில்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கூட்டணியாக களமிறங்கும் இக்கட்சிகள், பஞ்சாபில் தனித்தனியாக போட்டியிட முடிவு செய்துள்ளன.