in ,

திருப்பத்தூர் அருள்மிகு ஶ்ரீ திருத்தளிநாதர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு

திருப்பத்தூர் அருள்மிகு ஶ்ரீ திருத்தளிநாதர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு நந்தியம்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ திருத்தளிநாதர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷத திருநாளை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது முன்னதாக கொடிமரம் முன்பு உள்ள பிரம்மாண்ட நந்தியம் பெருமானுக்கு என்னைக் காப்பு சாற்றி திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் சந்தனம் தேன் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன தொடர்ந்து வண்ண மலர்மாலையில் அருகம்புல் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்று வில்வத்தால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன இதனை அடுத்து நந்தியம்பெருமானுக்கு நெய்வேதியம் செய்து தீப தூப ஆராதனையும் மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமான் சுவாமி அம்பாளை வழிபட்டனர்.

What do you think?

ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி மீளப் பெறுதல் ஆணைய ரத்து செய்து வீட்டு வரி சலுகை வழங்க வேண்டும்

மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிப்பு