ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி 2 வது சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை புறப்பாடு. திரளான பக்தா்கள் தாிசனம்.
ஸ்ரீயப்பதியான எம்பெருமான் சகல ஜீவராசிகளை உய்விக்க வேண்டி கலியுகத்தில் அர்ச்சாவதார ரூபியாய் திருத்தலங்களில் எழுந்தருளி அருள்புரிகின்றார். அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதியாக ஓடி வரும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பாப்பாகுடி கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள் பாலித்து வருகின்றார்.
இத் திருக்கோயிலில் புரட்டாசி 2 வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று இரவு கருடசேவை புறப்பாடு நடைபெற்றது. அதற்காக திருக்கேயாில் வளாகத்தில் பொிய திருவடியான கருடாழ்வாா் மீது உற்சவா் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் தன் தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளி அருள்பாலிக்க சோடச உபசாரணைகளுடன் நட்சத்திர ஆரத்தி கோபுரஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு தீா்த்தம் பிரசாங்கள் வழங்கப்பட்டதும் கருடசேவை புறப்பாடு நடைபெற்றது. பெண்கள் பஜன பாடல்கள் பாடியும், பக்தர்களின் கோவிந்தா கோபாலா கோஷங்களுடன் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் இந்த கருடசேவை நிகழ்வினை கண்டு சேவித்தனா்.