நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் புரட்டாசி செவ்வாய் திரிசதி அர்ச்சனை
நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் புரட்டாசி செவ்வாய் திரிசதி அர்ச்சனை ஏராளாமான பக்தர்கள் பங்கேற்ப்பு
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்றவாரு அருள்புரிந்து வருகிறார்.
ஆவணி மாத வளர்றை சஷ்டி தினத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிகக்காய், பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி கொண்டுஅபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் பின்னர் முருகப் பெருமானுக்கு திரிசதி அர்ச்சனை நடைபெற்றது.
நிறைவில் கோபுர தீபம் உட்பட பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளாமான பக்தர்கள் தரிசனம் பெற்று சென்றனர், வருகை புரிந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.