புரட்டாசி முதல் சனிக்கிழமை.. புதுச்சேரி பெருமாள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு.
புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத் திற்கு உகந்தவை.புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பது பெருமாளை வழங்கும் பக்தர்கள் நம்பிக்ககை.
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதேபோன்று காந்தி வீதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது.புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் சிறப்பு விசேஷ பூஜைகள் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்..இந்த புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமானை வழிபட்டு வருகின்றனர்…
இதேபோன்று முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில், தென்கலை வரதராஜ பெருமாள் கோவில், முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில், தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட ஆலயங்களில் காலை முதல் பொதுமக்கள் பெருமானை வழிபட்டு வருகின்றனர்…