in

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத உண்டியல் காணிக்கை

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத உண்டியல் காணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 085 ரூபாயும், தங்கம் 388 கிராம், 1 கிலோ 652 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் என கணக்கிடப்பட்டுள்ளது…

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.

வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக அண்ணாமலையார் கோவில், அஷ்டலிங்கம், திருநேர் அண்ணாமலையார் கோவில் , அடி அண்ணாமலை கோயில் உள்ளிட்ட இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக உண்டியல்கள் 82 இடங்களில் ஊழியர்களால் உண்டியல் அமைக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.

அதன்படி புரட்டாசி மாதத்தில் பக்தர்களால் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் ஊழியர்கள் மற்றும் சிவனடியார்களால் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.

இன்று எண்ணப்பட்டதில் 3 கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 085 ரூபாய் ரொக்கமும், 388 கிராம் தங்கமும், 1 கிலோ 652 கிராம் வெள்ளியும் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.

What do you think?

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் உயிரிழப்பு

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது