நாமக்கல் மோகனூரில் புரட்டாசி மாத பெளர்ணமி சிறப்பு அபிஷேக அலங்காரம்
நாமக்கல் மோகனூரில் புரட்டாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்ரமணியபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் முத்துகுமாராசாமி ஆலயத்தில் தனியே உள்ள ஸ்ரீ துர்கை அம்மனுக்கு புரட்டாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு பஞ்சாமிருதம், தேன் பால் தயிர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பலவகை வாசனை மலர்கள் கொண்டு அர்ச்சனையும் மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை வணங்கி சென்றனர்.