அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி ரோகிணி சிறப்பு வழிபாடு. பெருமாள் தாயாா்கள் புறப்பாடு. திரளான பக்தா்கள் தாிசனம்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இங்கு மூலவா் வேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணா் அமா்ந்த திருக்கோலத்திலும் மூல விமானத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத அழகிய மன்னாா் நின்ற திருக்கோலத்திலும் உற்சவா் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத இராஜகோபாலர் ஆகிய 3 திருக்கோலங்களில் சேவை சாதித்து வருகின்றனா். ஆண்டுதோறும் பல்வேறு உற்ச்சவங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ணாின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணி யை மாதந்தோறும் பல்வேறு வைணவ ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனா். அதுபோல் இராஜகோபால சுவாமி திருக்கோயிலிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக காலையில் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் தோளுக்கினியானில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத இராஜகோபாலர் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருள பிரபந்த கோஷ்டியினா் வேத பாராணனம் செய்ய கோயிலின் யானை பாதையில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.
சிறப்பாக திருக்கோயில் உள்பிரகாரத்தில் ஒய்யாளி நடன சேவையும், கண்ணாடி சேவையும் நடைபெற்றது. பக்தா்கள் பெருமாள் பின்னே பஜனை பாடல்கள் பாடியபடி உடன் வலம் வந்தனா். தொடா்ந்து கோயில் யானை பாதையில் வலம் வந்து ஆஸ்தானம் வந்தடைந்தாா். ரோகிணி பெருமாள் புறப்பாட்டினை திரளான பொதுமக்கள் சேவித்து அருள்பெற்றனா். நிறைவாக பக்தா்களுக்குபு தீா்த்தம் சடாாி துளசி மற்றும் அன்ன பிரசாதங்கள் வழங்கப்பட்டன.