in

தனியார், அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இடையை தள்ளுமுள்ளு


Watch – YouTube Click

தனியார், அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இடையை தள்ளுமுள்ளு

 

சாத்தூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இடையை மோதல்.நகர் காவல் நிலையம் முற்றுகை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரச போக்குவரத்து பணிமனையில் பேருந்து ஓட்டுனராக சாத்தூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (54) என்பவரும் ஆமத்தூர் அருகே வெல்லூர் பகுதியைச் சேர்ந்த முனியசாமி (55) என்பவர் நடத்துனராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இருவரும் சாத்தூர் -விருதுநகர் மார்க்கமாக அரசு பேருந்து இயக்கி வருகின்றனர். அதிகாலை வழக்கம் போல் சாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து விருதுநகர் புறப்படும் போது,அதே விருதுநகர் செல்லும் தனியார் பேருந்து ஓட்டுனராக பணி புரியும் வத்றாப் அருகில் உள்ள பட்டி ஓடை பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதனையடுத்து அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இருதரப்பினரும் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, காயமடைந்த நான்கு பேரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தகராறு குறித்து தகவல் அறிந்த சாத்தூர் போக்குவரத்து பணிமனை அனைத்து சங்க உறுப்பினர்களான அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் சாத்தூர் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகையிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் கலைந்து சென்றனர்.இருதரப்பினரிடமும் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி திமுக ஆலோசனைக் கூட்டம்

பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேச்சு