Pushpa The Rule… Movie Review
அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2, இறுதியாக திரையரங்குகளில் இன்று வெளியிடப்பட்டது, சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு டொரண்ட் தளங்களிலும் பைரசி தளங்களிலும் கசிந்தது, படத்தின் HD பிரதிகள் பல அங்கீகரிக்கப்படாத இணையதளங்களில் கிடைத்தன. Ibomma, Movierulz, Tamilrockers, Filmyzilla, TamilYogi, Tamilblasters, Bolly4u, Jaisha Moviez, 9xmovies மற்றும் Moviesda போன்ற இணையதளங்களில் Pushpa 2 HD பிரிண்ட்கள் கசிந்தது.
அங்கீகரிக்கப்படாத இணையதளங்களில் படம் கசிந்தாலும், புஷ்பா 2: தி ரூல் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ₹32.53 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தின் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் ஷாருக்கானின் ஜவான் , ரன்பீர் கபூரின் அனிமல் ஆகிய படங்களின் தொடக்க நாள் வியாபாரத்தை புஷ்பா 2 கடக்க அதிக வாய்ப்புள்ளது.
புஷ்பா 2 விமர்சனத்தை பார்போம், புஷ்பா ராஜின் மனைவிக்கு ஒரு ஆசை. தனது கணவரும், மாநில முதல்வரும் ஒன்றாக இருக்கும் படத்தைப் பார்க்க வேண்டும் என்று இருப்பினும், அவரைப் போன்ற கீழ்த்தரமான போக்கிரியுடன் படம் எடுப்பதை முதல்வர் விரும்பவில்லை என்று கூற.
காயமடைந்த புஷ்பா ராஜ் என்ன செய்கிறார்? செம்மற கடத்தில்காறரான புஷ்பா ஜப்பான் செல்கிறார். மறுபுறம் எஸ்.பி. பன்வர் சிங் ஷேகாவத் புஸ்பா வை பிடிக்க காட்டுக்குள் செல்கிறார், போலிசாரின் அத்துமிரலால் ஆத்திரம்அடைந்து அல்லு பகத்துடன் மோதுகிறார்.
அவரது கடத்தல் பின்னணி மற்றும் இன்ஸ்பெக்டர் ஷெகாவத்துடன் வாக்குவாதங்கள் எப்படிப் பெரிய பிரச்சனையாகிறது, என்பது புஷ்பாவின் இரண்டாம் பாகம். புஷ்பா தி ரூலின் உயிர்நாடி அல்லு அர்ஜுன்.
அந்தக் கதாபாத்திரமாகவே மீண்டும் வாழ்கிறார். படத்தின் பல தருணங்கலில் இதை நிருபித்திருக்கிறார், அம்மன் Get up…பில் அல்லு போடும் சண்டை காட்சியில் தியேட்டரில் ரசிகர்களை சாமி ஆட வைத்துவிட்டார்.
ராஷ்மிகா மந்தனாவுக்கு படத்தில் வரும் எல்லோரையும் போல அதிக ஸ்கோப் இல்லை. இருப்பினும், உணர்ச்சிகளை கொட்டி நடித்திருக்கிறார். பன்வார் சிங் ஷெகாவத்தாக வரும் ஃபஹத் ஃபாசில் பயங்கரமாக நடித்திருக்கிறார்.
அவர் வரும் காட்சியில் கண்கள் திரையை விட்டு எடுக்க முடியவில்லை. அல்லு அர்ஜுனுக்கு செம்ம டஃப் கொடுத்திருக்கிறார் ஃபஹத் ஃபாசில். இசை மற்றும் பாடல் அல்லு…வை போலவே வெறித்தனமாக இருக்கிறது.