நாமக்கல் பெருமாள் ஆலயத்தில் கல்வி கடவுள் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு புஷ்பாஞ்சலி விழா
நாமக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற பெருமாள் ஆலயமான மோகனுாரில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தில் கோஷ்டத்தில் தனியே உள்ள கல்வி கடவுள் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்சனை 5-ம் நாள் ஹயக்ரீவருக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு பின்பு . துளசி, வண்ண நறுமண பூக்கள் மற்றும் மஞ்சள் கொண்டு அர்ச்சனையும் ..நிறைவாக கல்வி கடவுள் லட்சுமி ஹயக்ரீவருக்கு கற்புறமஹா தீபம் காண்பிக்கப்பட்டது..
இந்நிகழ்வில் பள்ளிமாணவ மாணவிகள் தங்கள் புத்தகம் பேனாக்களையும் வைத்து வணங்கி சென்றனர்.. இரவு7.00 மணிக்கு லட்சார்சனை நிறைவு விழாக மாலை லட்சுமி ஹயக்ரீவர் அலங்கரிக்கப்பட்டு 3 முறை உள்புறப்பாடு நிகழ்வும் பின் கோஷ்டத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் உற்சவருக்கு பல விதமான வாசனை மலர்கள் கொண்டு புஞ்சாஞ்சலி நடைபெற்ற பின் கோபுரதீபம் உட்பட மஹா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.