என்னால் அமைச்சர் பதிவியை இழந்த ஆர் எம் வீரப்பன்
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் ஆர் எம் வீரப்பன் மறைந்து நேற்றோடு ஓராண்டு ஆகிவிட்டது.
அவரின் மறைவை ஓட்டி நடிகர் ரஜினிகாந்த் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
பஞ்சு அருணாச்சலம். பாலச்சந்தர். ஆர் எம் வீரப்பன் ஆகியோர் நம்மிடம் இல்லை என்று நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது பாட்ஷா படத்தின் 100-வது நால் விழாவில் வெடிகுண்டை பற்றி நான் மேடையில் பேசினேன்.
அப்பொழுது அமைச்சர் ஆர் எம் வீரப்பன் என்னுடன் இருந்தார் ஒரு அமைச்சரை பக்கத்தில் வைத்துக்கொண்டு வெடிகுண்டை பற்றி பேசக்கூடாது என்ற தெளிவு அன்று என்னிடம் இல்லை அப்பொழுது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஆர் எம் வீரப்பனை அமைச்சர் பதிவில் இருந்து நீக்கி விட்டார்.
அதைக் கேள்விப்பட்ட போது அதிர்ச்சையாகி விட்டேன் இரவெல்லாம் எனக்கு தூக்கம் வரவில்லை மறுநாள் காலை போன் போட்டு மன்னிப்பு கேட்டேன் ஆனால் அவர் ஒண்ணுமே நடக்காதது போல் என்னிடம் பேசினார்.
நான் அம்மாவிடம் பேசட்டுமா என்று கேட்டேன் அதெல்லாம் வேண்டாம் அவங்க ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அதை மாத்த மாட்டாங்க அப்படி எல்லாம் நான் கட்சியில் சேர வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார் அப்படி ஒரு அற்புதமான மனிதர் ரியல் கிங் மேக்கர் என்று பாராட்டி உள்ளார்.