in

தெலுங்கு நடிகர்களை கிழிதெடுத்த ராதிகா ஆப்தே

தெலுங்கு நடிகர்களை கிழிதெடுத்த ராதிகா ஆப்தே

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையில் தோன்றியவர் நடிகை ராதிகா ஆப்தே.

இவர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த போதிலும் தமிழில் வெற்றி செல்வன், கபாலி, சித்திரம் பேசுதடி2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். யாருக்கும் அஞ்சாமல் கங்கனா ரனோட் போல தைரியமாக பேசக்கூடியவர் ராதிகா ஆப்தே. இவர் தெலுங்கு சினிமா துறையின் மீது கடும் கோபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

தெலுங்கு சினிமா துறையில் நான் அதிகமாக உழைத்திருக்கிறேன் ஆனால் அதற்கான அங்கீகாரம் இன்று வரை எனக்கு கிடைக்கவில்லை. அங்கு படங்களில் கதாநாயகிகளை காட்டும் விதமே கொடூரமாக இருக்கும்.

பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. படப்பிடிப்பின் போது நடிகைகளை மூன்றாம் மனிதர்களைப் போல் தான் நடத்துவார்கள்.

தெலுங்கு பட ஷூடிங்கில் மற்ற நடிகர்களை கேட்காமலேயே ஹீரோக்கள் திடீரென்று படப்பிடிப்பை ரத்து செய்து விடுவார்கள் இப்படி நான் பலமுறை கஷ்டப்பட்டு இருக்கிறேன்.

அதனால் தான் தெலுங்கு துறையில் இனிமேல் நடிக்க கூடாது என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். இவரின் இந்த கருத்து தெலுங்கு சினிமா துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மை கசகத்தான் செய்யும் ..பொய்யால் செழிப்பாக வாழ்வதை விட உண்மைக்காக துன்பப்படுவது சிறந்தது.

What do you think?

தல அஜித்தை குற்றம் சாட்டிய… விமர்சகர் அந்தணன்

அக்கட தேசத்தில் நம்பர் ஒன் நடிகராவேன்…. சூறாவளியாக சுற்றும் சூர்யா…