in

பிரச்சாரத்தை நிறுத்தி ஆம்புலன்ஸ்சை வழி அனுப்பி வைத்த ராதிகா சரத்குமார்


Watch – YouTube Click

பிரச்சாரத்தை நிறுத்தி ஆம்புலன்ஸ்சை வழி அனுப்பி வைத்த ராதிகா சரத்குமார்

 

சிவகாசி அருகே செங்கமல நாச்சியார் புறத்தில் பிரச்சாரத்தின் போது தீயணைப்பு மீட்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசல் சிக்கிக் கொண்டது உடனடியாக தனது பிரச்சாரத்தை நிறுத்தி வழி அனுப்பி வைத்த ராதிகா சரத்குமார்.

பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராதிகாசரத்குமார் போட்டியிடுகிறார்.

இவர் இன்று சிவகாசி ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது சிவகாசி அருகே உள்ள செங்கமல நாச்சியாபுரத்தில் பிரச்சாரம் செய்தார் அப்போது பேசிய ராதிகா மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை இருந்தாலும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியவர் பாரதப் பிரதமர் மோடி தான் சீன பட்டாசுக்கு முழு தடை விதித்து சிவகாசி பட்டாசு தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கு மத்திய அரசு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 33 மாதங்களில் துவங்கி முடிக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.

இது போன்ற நல்ல திட்டங்களை பெற அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அப்போது பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு வாகனம் வந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது உடனடியாக தனது பேச்சை நிறுத்தி ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு வாகனத்திற்கு வழியனுப்பு வைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

அண்ணாமலை மீது வழக்கு

ஆ .சிரமம் அருள்மிகு ஶ்ரீ கொங்கேஸ்வரர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷே விழா