in

ராதிகாவிடம் புலனாய்வு குழு விசாரணை…. மேலும் சில நடிகர்கள் விரைவில் கைதாகலாம்

ராதிகாவிடம் புலனாய்வு குழு விசாரணை…. மேலும் சில நடிகர்கள் விரைவில் கைதாகலாம்

 

ஹேமா கமிட்டியை பற்றி நடிகை ராதிகாவிடம் தனியார் தொலைக்காட்சி பேட்டி எடுத்தபோது கேரவனில் ரகசிய கேமரா இருப்பதாக பகிரகமாக குற்றம் சாட்டியுள்ளது.

எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கேமரா வைத்தால் நான் போலீசில் புகார் அளிப்பேன் என்று எச்சரிக்கை கொடுத்தேன்.

அதன் பிறகு ஹோட்டலில் தான் தங்குவேன் என்று கூறியுள்ளார். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை விசாரிக்க கேரளா அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

ராதிகாவிடம் விசாரணை நடத்த அவரை தொலைபேசியில் அழைத்தனர் இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக ராதிகாவுடன் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

மேலும் யார் இந்த குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் யாரெல்லாம் கேமரா வைக்கிறார்கள் என்று ராதிகாவிடம் பல மணி நேரம் விசாரிக்க பட்டது.

இது பற்றி ராதிகாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது . நான் புகார் எதுவும் கொடுக்கவில்லை நடந்த சம்பவத்திற்கு விளக்கம் மட்டும் கொடுத்திருக்கின்றேன்.

ரகசியத்தை வெளியே சொன்னதற்கு வருத்தப்படவில்லை பயப்படவும் இல்லை ஏனென்றால் வருங்காலத்தில் வரும் நடிகைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே இதை நான் கூறினேன்.

பெரிய நடிகர் ஒருவர் தண்ணி அடித்து விட்டு நடிகையிடம் தவறாக நடந்த பொழுது நான் அவரை கண்டித்தேன் போலீசில் புகார் செய்து விடுவேன் என்று மிரட்டினேன் அதன் பிறகு அவர் அந்த நடிகையிடம் மன்னிப்பு கேட்டார்.

அப்படிப்பட்ட ஆண்களை தான் இந்த சமூகம் மேலே தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது ஒவ்வொரு நடிகையும் கஷ்டப்பட்டு இந்த துறையில் பயணிக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு பின்னால் வலி மிகுந்த கதை இருக்கிறது எனக்கு தெரியும் ஆனால் இன்றுவரை எந்த நடிகையும் யாரும் கொண்டாடியதில்லை.

What do you think?

பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஆவணி  மாத ஊஞ்சல் உற்சவம்

நடிகர்களை தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்படுத்த முடியாது