நாமக்கல் சிவஆலயத்தில் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு ஆடிமாத முதல் ஞாயிற்றுக்கிழமை ராகு கால சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி கரை மீதுள்ள அருள்மிகு அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் ஆடிமாத முதல் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு இங்கு தனி சன்னதியில் உள்ள ஸ்ரீ சரபேஸ்வரருக்கு மாலை நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணி வரை உள்ளராகு கால நேரத்தில் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி எனபல்வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது
சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் ஸ்ரீ சரபர் முப்பதாவது மூத்தமாகும் பாதி சரீரம் விலங்கினாலும் பயங்கர சக்தி படைத்த யாளியாகவும் பாதி சரீரம் பறவையினால் மிக சக்தி வாய்ந்த சர பச்சியாகவும் பயங்கர உருவத்துடன் சரபேஸ்வரரின் தோற்றம் இருக்கும் இந்த சரபேஸ்வரரை ராகுகால நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை வணங்குவதால் எதிரிகள் குலநாசம் புத்தி முத்தி ஏற்படுதல் பில்லி சூனியம் ஒழிப்பு மரண பயம் நீங்குதல் மன வியாதிகள் நீங்குதல் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகுதல் ராஜ உபச்சாரம் உள்ளிட்டவைகள் கிட்டுவது என ஐதீகம் எனவே பக்தர்கள் இந்த சரபேஸ்வரரை 11 முறை சுற்றி வணங்கி சென்றனர் வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.