in

வனதுர்க்கை அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை

வனதுர்க்கை அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை

 

செஞ்சி சக்கராபுரம் பொன்பத்தி ஏரி கரை மேல் அமைந்துள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை ராகுகால பூஜையில் பெண் பக்தர்கள் மனம் உருகி வழிபாடு…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபுரம் பொன்பத்தி கிராமத்திற்கு செல்லும் ஏரிக்கரை சாலையின் மேல் அமைந்துள்ள அருள்மிகு வனதுர்க்கை அம்மன் கோவிலில் பங்குனி மாத வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு ராகு கால பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இன்று காலை அம்மனுக்கு பால் தயிர் சந்தனம்,மஞ்சள்,விபூதி பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகமும், எலுமிச்சம் பழத்தாளும், பூக்களாலும்,வளையல்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

மேலும் இக்கோவிலில் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் தொடர்ந்து ஐந்து வாரங்கள் நெய் தீபம் ஏற்றியும்,இளப்பை எண்ணெய், நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷங்கள், குழந்தை பாக்கியம், தொழில் வியாபாரம், குடும்பத்தில் ஏற்படும் கஷ்டம், நிவர்த்தி அடைந்து பலன் கிடைப்பதாக கோவிலில் வணங்கும் பெண் பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

குறிப்பாக, வாரம் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை இரண்டு தினங்களில் வரும் ராகுகால நேரத்தில் கோவிலில் விளக்கேற்றி செய்யப்படும் அம்மன் வழிபாடு, நம் இல்லங்களில் அம்மனின் அருள் பரிபூரணமாக விளங்கச் செய்யும் வழிபாடு. என்பதால் சக்கராபுரம் வன துர்க்கை அம்மன் கோவிலில் செஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதியிலிருந்து ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு மனம் உருகி அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் இன்று முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தங்கள் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வேண்டியும், தங்கள் பிள்ளைகளின் பெயரில் அர்ச்சனை செய்து வழிப்பட்டனர் ….

What do you think?

தேவூர் ஸ்ரீ தேவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

தர்மபுரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் சீர்வரிசை கொண்டு வந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு