ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் தவழும் குழந்தையாக இருந்து வருகிறார் – செல்வகணபதி கடும் விமர்சனம்
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் தவழும் குழந்தையாக இருந்து வருகிறார் என்று புதுச்சேரி பிஜேபி தலைவர் செல்வகணபதி கடும் விமர்சனம்.
இட ஒதுக்கீடு குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து புதுச்சேரி பாஜக ஓபிசி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகே நடைபெற்றது.
பிஜேபி ஓபிசி அணி தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி பிஜேபி தலைவர் செல்வ கணபதி கண்டன உரையாற்றினார்.
அவர் பேசும்போது…
ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் இட ஒதுக்கீடு குறித்து தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார் காங்கிரஸ் கட்சியில் அவர் தவழும் குழந்தையாகவே இருந்து வருகிறார் என்ன பேசுவது என்று தெரியாமல் அவர் பேசுவதாக கடுமையாக விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட புதுச்சேரி பாஜகவை சேர்ந்த பல்வேறு அணியினர் ராகுல் காந்தியை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.