நாட்டு வைத்தியர் வெட்டி கொலை 4 பேரை பிடித்து ராயப்பன் பட்டி காவல்துறையினர் விசாரணை
சின்ன ஓவலாபுரத்தில் எலும்பு முறிவு நாட்டு வைத்தியர் வெட்டி கொலை 4 பேரை பிடித்து ராயப்பன் பட்டி காவல்துறையினர் விசாரணை ….
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சின்ன ஓவலாபுரம் வரதராஜபுரம் பகுதியைச் சார்ந்தவர் சந்திர வேல்முருகன் (52), இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் கூடலூர் பகுதியில் எலும்பு முறிவு நாட்டு வைத்தியசாலை வைத்து பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி பணிக்கு சென்று விட்டு இரவு வெகு நேரமாக சந்திர வேல் முருகன் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனை அடுத்து சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சந்திரன் அவர்களை தேடி உள்ளனர் ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்திர வேல்முருகனை தீவிரமாக தேடியுள்ளனர்.
இதற்கிடையே சந்திரா வேல்முருகனின் மகள் சினேகாவை சின்ன ஓவலாபுரத்தைச் சார்ந்த நல்லசாமி(27), என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளனர்.
கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பாக நல்லசாமி மற்றும் அவரது சித்தப்பா கவிசீலன் அவரது மகன் நிஷாந்த் மற்றும் சிலர் வேறு ஒரு குடும்ப பிரச்சனை ஒன்றிற்காக கடமலைக்குண்டு பகுதிக்கு சென்று இருந்துள்ளனர். அப்போது அங்கு ஏற்பட்ட பிரச்சனையில் எதிர்பாராத விதமாக நல்லசாமி கொலை செய்யப்பட்டதாகவும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தனது மருமகனின் உயிரிழப்பிற்கு காரணம் கவிசீலன் குடும்பத்தார் என்று கூறி அவ்வப்போது சந்திர வேல்முருகன் மற்றும் கவி சீலன் குடும்பத்தினர் இடையே தொடர்ச்சியாக பிரச்சனைகள் நடைபெற்று வந்துள்ளது.
மேலும் இந்த இரு குடும்பத்தாருக்கு இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சண்டை நடைபெற்றதாகவும் இதுகுறித்து சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது,
இந்நிலையில் சந்திர வேல்முருகன் காணாமல் போன சூழ்நிலையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர், அதில் சந்தேகத்தின் பேரில் ஒரு ஆட்டோ ஒன்று வந்து சென்றுள்ளது இதனை அடுத்து சந்தேகத்தின் பெயரில் கவிசிலனின் மகன் ஆட்டோ ஓட்டுநர் நிஷாந்த், கவிசீலன் மற்றும் இருவரை பிடித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் சந்திரவேல்முருகனை கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில் முன்பகை காரணமாக கடந்த இரண்டாம் தேதி இரவு பனி முடித்துவிட்டு வீடு திரும்பி வந்தா சந்திர வேல் முருகனை ஊர் நுழைவாயில் பகுதியில் வைத்து அறிவாலால் வெட்டி கொலை செய்துவிட்டு அவரை நிஷாந்த் மற்றும் அவர் குடும்பத்தினர் சேர்ந்து ஆட்டோவில் கொண்டு சென்று சின்ன ஓவலாபுரம் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் மரிக்காடு என்ற பகுதியில் உள்ள சாலையோர பாலடைந்த கிணற்றில் வீசியதாகவும் மேலும் சந்திர வேல்முருகன் வந்த இருசக்கர வாகனத்தையும் அந்த கிணற்றுக்குள் வீசி சென்றதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து காவல்துறையினர் இன்று கிணற்றுக்குள் இருந்த சந்திரவேல் முருகனின் உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்டு சம்பவ இடத்திலேயே தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனைக்காக உடலை தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று அங்கு பிரத பரிசோதனை கூடத்தில் வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் தொடர்ச்சியாக வழக்கு பதிவு செய்து நிஷாந்த் மற்றும் அவரது தந்தை மற்றும் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.