in

16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரெயில் மறியல் போராட்டம் – ஐக்கிய விவசாயிகள் சங்கம்

16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரெயில் மறியல் போராட்டம் – ஐக்கிய விவசாயிகள் சங்கம்

ஐக்கிய விவசாய சங்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன், மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் இன்று திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

விவசாயிகள் சொத்துக்கள் அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மத்திய அரசு சர்பாசி சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டத்தை கொண்டு வரவேண்டும். இதனை வலியுறுத்தி கடந்த 26-ம் தேதி முதல் பஞ்சாப் மாநிலம் கண்ணுரி பார்டரில் ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் ஜெகசித் சிங் டல்லேபாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வருகிற 16-ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தனர்

மேலும் டெல்லி சென்று சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்

தமிழ்நாடு அரசு மோடிக்கு அண்ணனாக செயல்படுகிறது

டெல்லியில் விவசாயிகள் போராடும்போது திமுக அதை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்தனர்

திமுக எதிர்கட்சியாக இருந்தபோது பத்து ஆண்டு காலம் போராடி தான் ஆட்சிக்கு வந்தனர் ஆனால் தற்போது போராடும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடுகின்றனர் மோடி அரசு கூட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடவில்லை என தெரிவித்தனர்

What do you think?

திருக்கார்த்திகை தீபத்திருவிழா 4 ஆம் இரவு உற்சவம்….

அய்யம்பேட்டையில் பயங்கரம். மினிபஸ் பேருந்து டிரைவர் வெட்டிக்கொலை