காவேரி நீரை பெற்று தராத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தஞ்சை மாவட்டங்களில் ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் இதனால் பெரும் பரபரப்பு
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை ஆதலால் காவிரி நீரை பெற்று தராத தமிழக அரசை கண்டித்தும் உரிய அழுத்தம் தராத மத்திய அரசை கண்டித்தும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 20 இடங்களில் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் இதில் ஒரு பகுதியாக தஞ்சை ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வாஸ்கோடகாமா வேளாங்கண்ணி விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் வேளாங்கண்ணி விரைவு ரயில் 45 நிமிடம் கழித்து தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது மேலும் ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர் இதே போல நீர்வளத் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காவிரி உரிமை மீட்புக் குழு அமைப்பை சேர்ந்த பெ மணியரசன் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்ற வருகிறது இந்த போராட்டம் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் டெல்டா மாவட்டங்களில் மிகுந்த பரபரப்பு நிலவி வருகிறது