in

திருத்துறைப்பூண்டியில் கர்நாடக அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்

திருத்துறைப்பூண்டியில் கர்நாடக அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்

 

திருத்துறைப்பூண்டியில் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து 300 மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி டெல்டா பாசனம் மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் ஒன்றிய அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் தற்போது ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கர்நாடக அணைகளில் 250 டிஎம்சி தண்ணீர் நிரம்ப இருந்தும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூட திறக்க மறுத்து அதற்கு ஆதாரமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள கர்நாடக அரசு கண்டித்தும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட ஒன்றிய அரசு அறிவுறுத்திட வேண்டும்

தமிழக அரசு அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கங்களை உடனடியாக கூட்டி பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தற்போது இந்த ரயில் மறியல் போராட்டமானது நடைபெற்று வருகிறது.

இந்த ரயில் மறியல் போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .

What do you think?

தருமபுரம் குருஞானசம்பந்தர் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம்

இராஜபாளையத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம் மீட்கப்பட்டது…