in

கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் பொதுமக்கள் அவதி


Watch – YouTube Click

கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் பொதுமக்கள் அவதி

 

கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொழில்பேட்டை செல்வ நகர் மற்றும் நரிக்கட்டியூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் பொதுமக்கள் அவதி.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வரும் நிலையில், இன்று கரூர் மாநகர் பகுதி, வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோணி மலை, மண்மங்கலம், காந்திகிராமம், கிருஷ்ணராயபுரம், வெள்ளியணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது‌.

இந்த நிலையில் தொழிற்பேட்டை செல்வ நகர் மற்றும் நரி கட்டியூர் பகுதியில் கனமழையின் காரணமாக சாலை மற்றும் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மேலும் இரவு நேரத்திலும் மழை பெய்து வருவதால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வரும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறினர்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது

சைபர் கிரைம் போலீசார் பதிவு வழக்கிற்கு சொந்த ஜாமினில் விடுவிப்பு