in

கனமழையின் காரணமாக மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழை நீர்


Watch – YouTube Click

கனமழையின் காரணமாக மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழை நீர்

 

மதுரையில் இடியுடன் செய்த கனமழையின் காரணமாக மழை நீர் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழை நீர் மோட்டார் மூலம் நீரை அகற்றும் பணியில் ஒப்பந்ததாரர்கள்.

மதுரை வண்டியூர் கண்மாய் அருகே உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மழை நீர் வாய்க்கால் மூலம் நீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஆவின் பாலகம் எதிரே இருக்கக்கூடிய மானகிரி குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது.

குறிப்பாக அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனம் இரு சக்கர வாகனம் ஆகியவை தண்ணீரில் மூழ்கிய நிலையில் மோட்டார் கொண்டு தண்ணீரை அகற்றும் பணியில் பாலம் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலம் கட்டுமான பணிகள் மற்றும் குடிநீர் குழாய் காண பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை ஜேசிபி இயந்திரம் வைத்து ஒருபுறம் குழி களை மூடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

வண்டியூர் கண்மாய் நோக்கி செல்லக்கூடிய பிரதான கால்வாயில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் மழைநீர் செல்ல முடியாததால் இப்ப பகுதிகளுக்குள் மழைநீர் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலம் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர்கள் தண்ணீரை முழுவதுமாக அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றுவதால் வெள்ளை நிற நுறையும் கிளம்பி வரக்கூடிய நிலையில் தண்ணீரை முழுவதுமாக அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் 19 ஆம் தேதி இதே போன்று கனமழை பெய்த போது இரவில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த நிலையில் மறுநாள் காலை டிராக்டர் கொண்டு மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா