in

விஜய்…யை தாறுமாறாக திட்டிய ரஜினிகாந்த் ரசிகர்


Watch – YouTube Click

விஜய்…யை தாறுமாறாக திட்டிய ரஜினிகாந்த் ரசிகர்

கடந்த சில ஆண்டுகளாக ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே ஆன்லைன் மோதல்கள் தொடர்கின்றன, ஆனால் சமீபத்தில் ரஜினிகாந்தின் ரசிகர் என்று கூறிகொண்டு ஒருவர் கூறிய கருத்து எல்லை மீறி இருக்கிறது.

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராகவும் விஜய்க்கு எதிராகவும் ரஜினிகாந்த் பேசியது போல் ஒரு ஆடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதில் சுற்றுப்பயணம் செய்யும் விஜய் மீது முட்டை வீசப்படும் என்று அந்த நபர் கூறியிருந்தார்.

இதுகுறித்து ரஜினியின் பிஆர்ஓ ரிசா கே அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் நடிகர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, உண்மையான ரஜினி ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அனைத்து ரசிகர்களும் கண்ணியத்தையும் பரஸ்பர மரியாதையையும் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சினிமா என்பது மக்களை ஒன்றிணைப்பதாகும், பிளவுகளை உருவாக்க அல்ல. ரசிகன் என்ற பெயரில் எந்த நடிகருக்கோ அல்லது சக மனிதர்களுக்கோ எதிராக வெறுப்பை பரப்பக் கூடாது.

நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் பின்பற்றுபவர்கள் என்ற முறையில் நாம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. நமக்குப் பிடித்த நட்சத்திரங்களை அன்புடனும் நேர்மறை உணர்வுகளுடனும் கொண்டாட வேண்டும். கலாச்சாரம் மரியாதை மற்றும் பெருமையால் வரையறுக்கப்படட்டும், வெறுப்பால் அல்ல.


Watch – YouTube Click

What do you think?

சிவகங்கை ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா

குடும்ப பாரம்பரியத்தை தொடர எனக்கு பேரன் வேண்டும்… சிரஞ்சீவி கருத்துக்கு கடும் எதிர்ப்பு