in

மோகன் பாபு பல்கலைக்கழகத்திற்கு சென்ற ரஜினிகாந்த்


Watch – YouTube Click

மோகன் பாபு பல்கலைக்கழகத்திற்கு சென்ற ரஜினிகாந்த்

 

ரஜினிகாந்த் தற்பொழுது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி மற்றும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கூலி படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் முடிந்தவுடன் அங்கிருக்கும் பாபா கோயிலுக்கு சென்றவர் நேராக பெங்களூரில் உள்ள மோகன் பாபு பல்கலைக்கழகத்திற்கு சென்று பார்வையிட்டார்.

மோகன் பாபு ரஜினிகாந்த் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே ரஜினிகாந்த் எப்போது பெங்களூர் சென்றாலும் அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்து விடுவாராம் மோகன் பாபு.

மோகன் பாபு சென்னை வந்தால் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் தங்குவார். தற்பொழுதும் நட்பு காரணமாக ரஜினிகாந்த் பெங்களூரில் உள்ள மோகன்பாபுவின் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருகிறார்.

பல்கலைக்கழகத்தில் சீர் அமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரஜினிகாந்த் மற்றும் மகள் ஐஸ்வர்யா பார்வையிட் டனர். இந்த திடீர் வருகைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.. ரஜினிகாந்த் மற்றும் மோகன் பாபு இருவரும் தங்கள் தொழில் தொடக்க நாட்களிலிருந்தே நல்ல நண்பர்கள் ..

நட்பு பாராட்ட சென்ற ரஜினிகாந்த் மோகன்பாபு பல்கலைக்கழகம் போல் தான் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப் போவதால் தான் பார்வையிட வந்தார் என்று இணையத்தில் கிசுகிசுக்க படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

குடும்பத்துடன் பிரதமரை சந்தித்த நடிகர் நாக சைதன்யா