ரஜினிகாந்த்தின் பிறந்தநாளுக்கு பிரபலங்களின் வாழ்த்து
ரசிகர்களால் தலைவர் என்று அன்புடன் அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபலங்களின் அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு மத்தியில் இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
கமல்ஹாசன், தளபதி விஜய், எஸ்.ஜே.சூர்யா, நெல்சன் திலீப்குமார், மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்ககளை பகிர்ந்து கொண்டனர்.
ரஜினிகாந்தின் அன்பு நண்பரான கமல்ஹாசன், “என் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேலும் மேலும் வெற்றிகளை அடையட்டும்; நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கட்டும்; மகிழ்ச்சியுடன் நிறைந்திருக்கவும்; நீண்ட காலம் வாழவும்” என்று பதிவிட்டுள்ளார்.
தளபதி விஜய் அவர்கள் என் அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க! பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் …இன்னு பதிவிட்டுள்ளார்.