ரஜினியின் உடல்நிலை …பாதிப்பு…காரணம் லொகேஷ்… குற்றசாட்டு
ரஜினியின் உடல்நிலை கோளாறுக்கு காரணம் லொகேஷ் என்று தற்போது சமூக வலைத்தளத்தில் குற்றச்சாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அதாவது வயிற்று வலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட ரஜினி பிறகு ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு Stant பொருத்திருக்கப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
மருத்துவமனையில் ரஜினியை பார்த்த லோகேஷ் கனகராஜ் வெளியே வந்து நிரூபர்களுக்கு பேட்டி அளித்த போது ரஜினி சார் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு நான் தான் காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள். ஆனால் இந்த சிகிச்சை ஏற்கனவே திட்டமிட்ட படி தான் நடந்திருக்கிறது.
ரஜினி அவர்கள் ரசிகர்களாக இந்த வயதிலும் மெனக்கிடுகிறார் அவரை நாங்கள் கஷ்டப்படுத்துவோமா அப்படி கஷ்டப்படுத்தினால் சன் பிக்சர்ஸ் எங்களை சும்மா விடாது என்று கூறிஇருக்கிறார்.
இவரின் பேட்டிக்கு பதில் கேள்வி கேட்டிருகிறார் வளை பேச்சாளர்அந்தணன். நன்றாக இருந்த ரஜினிக்கு திடீரென்று எப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டது அதுவும் கூலி பட சூட்டிங்…கில் இருந்தவர் அதிகாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஷூட்டிங்கின்…போது மழையில் நனைந்தபடியே ரஜினிகாந்த் சண்டை காட்சிகள் நடித்த பொழுதுதான் அவருக்கு திடீரென்று வலி ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சை அளித்த மருத்துவர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் தான் அவருக்கு இந்த வலி ஏற்பட்டது என்று பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இந்த குற்றச்சாட்டை மறுத்தால் அந்த வீடியோவை அவருக்கு நான் Forward ….செய்யவா என்று அந்தணன் கேள்வி கேட்டிருக்கிறார்.