ஆளுநர் மாளிகை முற்றுகையிட பேரணி.போலிசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியல்
ஆளுநர் மாளிகை முற்றுகையிட பேரணி.போலிசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியல். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்
புதுச்சேரி அரசு, பொதுப்பணித்துறையில் கடந்த என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக முறைகேடாக பணியில் அரசு வைத்தது… இந்த முறைகேடை அப்போது தேர்தல் துறை அனைவரையும் பணிநீக்கம் செய்தது..
இதனைத் தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில்..பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு செய்த பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ரூபாய்18000/-ஆயிரம் சம்பளத்துடன் மீண்டும் வேலை வழங்கப்படும் என அறிவித்தார்.
ஆனால் இதுவரை அறிவித்த 18 ஆயிரம் ரூபாயும் மற்றும் பணி நிரந்தரமும் செய்யவில்லை, எனவே உயர்த்தப்பட்ட சம்பளம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றியிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.
அண்ணா சிலை அருகில் புறப்பட்ட பேரணியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் சேர்ந்த பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 100க்கும மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரணியில் ஈடுபட்டனர்…
அண்ணா சாலை வழியாக பேரணி வந்தவர்களை ராஜா திரையரங்கம் நான்கு முனை சந்திப்பில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் அனைவருமே கைது செய்து அழைத்துச் சென்றனர்…