in

புதுச்சேரியில் நவராத்திரியை முன்னிட்டு இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் ராம் கதா மேடை நாடகம்

புதுச்சேரியில் நவராத்திரியை முன்னிட்டு இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் நடைபெற்ற ராம் கதா மேடை நாடகத்தை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

புதுச்சேரியில் சமர்ப்பண் குழுவினர் கடந்த 5 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் நவராத்திரியின் போது மேடை நாடகங்களை நடத்தி இளைஞர்களுக்கு பல்வேறு வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துக்காட்டி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக நாம் பிரார்த்தனை செய்யும் ராமனை பற்றி குழந்தைகளுக்குத் தெரியப்படுத்தும் நோக்கத்துடன். புதுச்சேரியில் நவராத்திரியை முன்னிட்டு சமர்ப்பன் குழுவினரின் ராம் கதா மேடை நாடக நிகழ்வு எல்லைப்பிள்ளை சாவடியில் நடைபெற்றது.

சமர்ப்பண் குழுவினரின் நிர்வாகி சித்ரா தலைமையில் நடைபெற்ற மேடை நாடக நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பத்மஸ்ரீ டாக்டர் நளினி ஜிப்மர் பேராசிரியர் பாவனா ஆகியோர் நாடகத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த மேடை நாடகத்தில் குழந்தைகளை முன்மாதிரியாக மாற்றுவதற்காக உண்மை, நீதி, கருணை, தியாகம், அன்பு, பக்தி, தைரியம் ஆகியவற்றின் உருவகமாக ராமர் கருதப்படுகிறார்.

ஒரு சிறந்த வாழ்க்கைக்கான உத்வேகத்தைப் பெற ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் மேடை நாடக நிகழ்வு அமைந்திருந்தது. இதில் புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு ராம் கதா மேடை நாடகத்தை கண்டு ரசித்தனர்.

What do you think?

புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் திருக்கோவிலில் வித்யாரம்பம் தொடக்க விழா

அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதியம்பாள் திருக்கோவில் முன்பு 13வது ஆண்டு சக்தி தரிசனம்