in

தஞ்சாவூர் கோதண்டராமர் கோவிலில், ராம‌ நவமி பிரமோற்சவம்

தஞ்சாவூர் கோதண்டராமர் கோவிலில், ராம‌ நவமி பிரமோற்சவம்

 

தஞ்சாவூர் கோதண்டராமர் கோவிலில், ராம‌ நவமி பிரமோற்சவம். கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த எம்பெருமான்.

தஞ்சைக்கு கிழக்கே புன்னைநல்லூர் பகுதியில், ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் செயல்பட்டு வரும் இக்கோயில், 400
ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலில், ஸ்ரீ கோதண்டராமரும் ஸ்ரீ காசி விஸ்வநாதரும் அருள்பாலிக்கின்றனர்.

இங்கு உள்ள ராமர், சீதை, இலக்குவன் ஆகியோரின் உற்சவர் சிலைகள் சுமார் 1400 ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ ராம நவமி பிரமோற்சவம், சிறப்பாக நடைபெறும்.

அதன்படி இந்தாண்டு பிரமோற்சவ விழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக நான்காவது நாளில் பெருமாள் அவரது பெரிய திருவடி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முன்னதாக பெருமாளுக்கு பெருந்தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, திருமங்கையாழ்வார் அருளிய தமிழ்ப் பாசுரங்களை ஓதுவார்கள் பாடினர்.

அதனைத் தொடர்ந்து கருட வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.‌ கருட வாகனத்தில் எம்பெருமான் திருவீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் கோவிலில் பங்குணி உத்தர திருவிழா

பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா..