in

தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமாதஸ்

தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமாதஸ்

 

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமாதஸ் இரண்டு ஆட்சி பணிகள் அதிகாரிகள் வீட்டில் 42 மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தியதற்கு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை அதிகாரிகள் ஆட்சி தான் நடைபெறுவதாகவும் ஆட்சி நிர்வாகம் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என குற்றஞ்சாட்டினார்.

பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடக்க கல்வி ஆசிரியர்களின்
இயக்கங்கள் போராட்டம் செய்வதாக அறிவித்தனர்.

அதன் பின்னர் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கைவிட்ட ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர் லோக் ஆயுத்தா வலுபடுத்தபட வேண்டும் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக் ஆயுத்தா வலிமையானதாக இருக்க வேண்டும் கர்நாடகாவில் உள்ளது போன்று தமிழகத்தில் வலிமையாக இல்லை
முதல்வரை விசாரிக்கும் அதிகார லோக் ஆயுத்தாவிற்கு இல்லை என்பதால் லோக் ஆயுத்தா விசாரனை வரம்புக்குள் முதலமைச்சரை விசாரிக்கும் அதிகாரத்தினை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது குறித்து கூறுவதற்கு எதுவுமில்லை.

மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது புதியதாக தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும் என ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது என்றும் மதுவிலக்கு என்பது மாநில பட்டியலில் உள்ளது மதுகடை திறப்பது மூடுவது போன்ற அதிகாரம் மாநில அரசுக்கு உள்ள போது மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என கூறுவது ஏமாற்று வேலை மதுவிலக்கு கொண்டுவருவது குறித்து அமைச்சர் முத்துசாமி மத்திய அரசு தேசிய அளவில் கொள்கை உருவாக்க கூறுவது அபத்தமானது என கூறினார்.
மது ஆலைகளை வைத்துள்ள திமுக மதுவிலக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபடாது என்றும் கூறினார். .

What do you think?

மாநாடு நடத்த மீண்டும் 17 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது

திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு மண்டல அபிஷேக 20-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்