in

பாமக-வின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை ராமதாஸ்வெளியிட்டார்

பாமக-வின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை ராமதாஸ்வெளியிட்டார்

 

விழுப்புரம்: அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று பாமக நிழல் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று (மார்ச் 10) பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக-வின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும், நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதிலும் தமிழக அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற உன்னத நோக்குடன் 2003 – 2004ம் ஆண்டு முதல் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தயாரித்து வெளியிட்டு வருகிறது. இந்தாண்டு 23-வது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட, மூத்த செய்தியாளர் ஒருவர் பெற்றுக்கொண்டார். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத்தலைவர் பு தா அருள்மொழி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, முன்னாள் அமைச்சர் ஏ கே மூர்த்தி, எம்.எல்.ஏ சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிதிநிலை அறிக்கையின் படி, கல்வி, மருத்துவம், விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசுக்கு பாமக வலியுறுத்தியுள்ளது. அதன்படி நிழல் பட்ஜெட்டில் கல்வி, மருத்துவத்துக்கு 6 விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு 65 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம், விவசாயத்துக்கு மொத்த செலவில் மூன்றில் ஒரு பங்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மே 1-ம் தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும். இரு மொழி.கொள்கை தொடரும். தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும். ரூ.318-க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ 5 ஆயிரம் வழங்கப்படும். டிஎன்பிஎஸ்சிக்கு நிலையான தேர்வு அட்டவணை உருவாக்கப்படும். பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது.

கோயம்பேடு பேருந்து முனையம் பூங்காவாக மாற்றப்படும். கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்படும். மேகேதாட்டு அணை கட்டுவது தடுக்கப்படும். வேளாண்மைத்துறைக்கு ரூ 65,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாதாமாதாம் இனி மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும். கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். அங்கீகரிக்கட்ட பத்திரிக்கையாளர்களுக்கு 90 சதவீத மானியத்தில் மடி கணினி வழங்கப்படும் போன்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “திமுக ஆட்சியில் 37 ஆயிரம் பேருக்கு நிரந்தர அரசுப்பணியும், 32 ஆயிரம் பேருக்கு தற்காலிக பணியும் அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துதுறையை தனியார் மயமாக்கிக் கொண்டுள்ளனர்.” என்று விமர்சித்தார்.

What do you think?

பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சின்ன நெற்குணம் ஸ்ரீ பூரணி ஸ்ரீ புஷ்கலாம்பா சமேத ‌ ஸ்ரீ ஒண்டி அய்யனாரப்பன் ஆலய கும்பாபிஷேகம்