in

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ்

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ்

 

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது

பேரிடர் காலத்தில் முன் களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு தீபாவளிக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது புதிய ஊழலுக்கு வழிவகுக்கும்.

ஒரு தனியார் பேருந்து நாளொன்றுக்கு 600 கி.மீ இயக்கப்பட்டால் 1,000 பேருந்துகளை இயக்கப்படும்போது போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1.14 கோடி இழப்பு ஏற்படும். மின்வாரியம் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதில் கமிஷன் கிடைப்பது போல தனியார் பேருந்துகளை இயக்குவதால் கமிஷன் கிடைக்கும்.அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்ட போதிலும் 17 முதல் 30 மாதங்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படவில்லை.

முதல்வர் தலையிட்டு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக, பகுதி நேர, ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒரு வாரம் முன்பாக இன்றோ, நாளையோ முன்கூட்டியே ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

தொடர்ந்து பாமக பொருளாளர் திலகபாமா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்ற வாரம் நாங்கள் இலங்கை சென்று கைது செய்யப்பட்ட மீனவர்களை சந்தித்து பேசிவிட்டு இந்திய தூதரகத்திலும் விசாரித்தோம்.

அப்போது, இந்தியா சார்பில் வழக்கறிஞர்கள் கூட நியமிக்கப்பட இல்லை எனத் தெரியவந்தது. தமிழக மீனவர்கள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. இது குறித்து தமிழக எம்பி-க்களும் பேசுவதில்லை. இலங்கை கடற்படையால் 162 மீனவர்களுக்கு மேல் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். படகு பழுதடைந்தாலும் அது நீரோட்டத்தில் இலங்கை எல்லைக்குள் நுழைய வாய்ப்புள்ளது. எனவே, இலங்கையுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

கேரள மீனவர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு தமிழக மீனவர்களுக்கு இல்லை” என்று திலகபாமா கூறினார். இந்நிகழ்வின் போது பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

What do you think?

பழனி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் 2.99 கோடி ரூபாய்  கிடைத்துள்ளது

இரட்டை பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை ஆராதனை