in

நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக ராமகிருஷ்ணன் பதவியேற்பு

நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக ராமகிருஷ்ணன் பதவியேற்பு 

 

நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக ராமகிருஷ்ணன் பதவி ஏற்று கொண்டார். மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு சைக்கிளில் வருகை தந்த அவர் பதவி பிரமாணம் செய்த பின் தனது 95 வயது தாய் மூலம் மேயருக்கான செங்கோல் மற்றும் அங்கியை ஆணையாளரிடம் பெற்றுக்கொண்டார்.

நெல்லை மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது இதில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களில் 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வழக்கம்போல் தனது பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் சைக்கிளில் நெல்லையப்பர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு மேயர் ராமகிருஷ்ணன் வருகை தந்தார்.

தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு மாமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் பதவியேற்பு விழா கூட்ட அரங்கில் புதிய மேயருக்கு ஆணையாளர் சுகபுத்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார் பதவியேற்பு விழா உறுதிமொழி எடுத்துக் கொண்ட மேயர் திராவிட மாடல் ஆட்சியில் முதன்மை மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சியை மாற்றுவேன் என பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

அதன் பின் மாநகராட்சி மேயருக்கான செங்கோல் மற்றும் அங்கியை தனது தாயின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆணையாளருக்கு கோரிக்கை வைத்தார். தொடர்ந்து தனது 95 வயது தாய் மரகதாம்பாள் மூலம் ஆணையாளரிடம் செங்கோல் மற்றும் அங்கியை பெற்றுக் கொண்டார்.

பின்னர் புதிய மேயருக்கு மாநகராட்சி ஆணையாளர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் மலர் கொத்து வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மாமன்ற உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

What do you think?

வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் அயலகத்தில் வாழும் தமிழர்கள் வருகை

சூரரைப் போற்று படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது அபர்ணா பாலமுரளி