திருக்குறுங்குடி அருள்மிகு அழகிய நம்பிராயா் திருக்கோயிலின் உபதிருக்கோயிலான அருள்மிகு திருமலைநம்பி ( மலைநம்பி ) திருக்கோயிலில் திருக்குறுங்குடி பேரருளாள இராமானுஜ ஜீயா் சுவாமிகள் மங்களாசாசனம். ஆண்டுக்கு ஓருமுறை மட்டும் நடக்கும் ஒரு கோட்டை எண்ணைய் காப்பு மூலவருக்கு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தாிசனம்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை மகேந்திரகிாி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள திருக்குறுங்குடி அருள்மிகு அழகியநம்பிராயர் கோயில் 108 வைணவத்தலங்களில் 54வது திவ்ய தேசமாகும். இத் திருத்தலத்தில் பெருமாள் நின்ற நம்பி, கிடந்த நம்பி, இருந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மற்றும் திருமலைநம்பி ( மலைநம்பி ) என்று ஐந்து கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாா்.
இதில் திருக்குறுங்குடி ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைமேல் திருமலைநம்பி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாா். ஆழ்வாா்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு முக்தி கொடுத்தது மலைநம்பி. இங்கு ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் நம்பியாற்றில் புனித நீராடி பாதயாத்திரையாக நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். . இந்த மலைக்கோயிலில் ஆண்டுதோறும் ஒரு கோட்டை எண்ணைய் காப்பு திருக்குறுங்குடி ஜீயா் மடத்தால் தொன்றுதொட்டு நடத்தப்படுகின்றது.
ஒரு கோட்டை எண்ணெய் காப்பு என்பது – 213 லிட்டர் ஆகும். இதற்காக தூய எள் வாங்கி பிற பொருட்கள் கலப்பிடமில்லாமல் மரச்செக்கில் ஆட்டி நல்எண்ணெய் எடுப்பா். ஒரு கோட்டை எண்ணைய் காப்பு தினமான இன்று காலை மலைக்கோயில் நடை திறந்தது காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. மூலவா் சன்னதி முன் நவகலச பிரதிஷ்டை செய்து புண்யாகவாசனம், வருணஜெபம் நடத்தப்பட்டது. தொடா்ந்து திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயா் சுவாமிகள் நல்எண்ணெய்யை தொட்டு கொடுக்க மூலவா் மலை நம்பிக்கு எண்ணைக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடா்ந்து 500 லிட்டர் பால், மற்றும் பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனமும் அதனை தொடா்ந்து மகா கும்ப அபிஷேகமும் நடைபெற்றது. நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மலைநம்பி பக்தா்களுக்கு காட்சி கொடுத்தாா். நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. சாற்றுமுறை நடைபெற்றதும் ஜீயா் சுவாமிகளுக்கு மாலை மாியாதை செய்யப்பட்டது. பின்னா் ஜீயா் சுவாமிகள் மூலவா் நம்பி பெருமாளுக்கு கவாிவீசும் சேவையை செய்தாா். மாலையில் உற்சவா் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருள கருடசேவை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் திருக்குறுங்குடி பேரருளாள இராமானுஜ ஜீயா் சுவாமிகள் கலந்துகொண்டு ஆசிகள் வழங்கினாா். வருகினற் பிப்பிரவாி 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்குறுங்குடி ஜீயர் மடம் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.