in

பொன்முடி மீதான சேற்றை வாரி இறைத்ததை ஏற்க முடியாது பாமக நிறுவனர் ராமதாஸ்

பொன்முடி மீதான சேற்றை வாரி இறைத்ததை ஏற்க முடியாது பாமக நிறுவனர் ராமதாஸ்

 

பொன்முடி மீதான சேற்றை வாரி இறைத்ததை ஏற்க முடியாது பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பலவழிகள் உள்ளது.

பொன்முடி மீதான சேற்றை வாரி இறைத்ததை ஏற்க முடியாது. இருப்பினும் இது மக்களின் கோபத்தின் வெளிப்பாடு என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் அறிவித்த சிங்கார சென்னை வளர்ச்சியை சில ஆண்டுகளில் நாம் வானத்தை நோக்கி பார்க்கப் போகிறோம்.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். இதனால் 88 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அகவிலைப்படி வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இது தொழிலாளர் விரோத போக்கு.கடை வாடகைக்கு வாடகையுடன் 18 சதவீத விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதை ரத்து செய்ய வணிகர்கள் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு திரும்பப் பெற மறுக்கிறது. இம்முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அகரம்பள்ளிப்பட்டியில் ரூ.16 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அண்மையில் திறக்கப்பட்ட பாலம் வெள்ளத்தில் சீற்றத்தால் அடித்து செல்லப்பட்டதை ஏற்கமுடியாது.

இதற்கான காரணம் அறிய விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.மானாமதுரையில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பணியாற்றிய மருத்துவர்களைப் பாராட்டுகிறேன். நோயாளிகளிடம் மருத்துவர்கள் கனிவாக பேசினால் பாதி நோய் போய்விடும்.

நான் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போது மக்கள் எனக்கு கொடுத்தப்பட்ட பட்டம் சின்ன டாக்டர் என்பார்கள். காலை 7.30 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று பிற்பகல் 2 மணிக்கு மேல் திரும்புவேன். என்னை பார்க்க நோயாளிகள் நீண்ட வரிசையில் நிற்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

What do you think?

Pushpa The Rule… Movie Review

மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது