in

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை

 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஒரு மாதத்திற்கு பிறகு உண்டியல் காணிக்கை இன்று எண்ணியதில் ஒன்றரை கோடி முப்பத்தி ஐந்து லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என முப்பெருமைகளையும் உடைய ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியல் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணியானது நடைபெற்றது.

இதில் ராமநாதசுவாமி கோவிலின் மற்றும் உப கோவில்களான ராமர் தீர்த்தம், லெட்சுமணன் தீர்த்தம், நம்பு நாயகி அம்மன் கோவில், ஜடாயு தீர்த்தம், ராமர் பாதம், பத்திரகாளி அம்மன் கோவில் போன்ற கோவில் இருந்து கோவில் பணியாளர்கள் பாதுகாப்பாக உண்டியல் எடுத்து வந்தனர்.

இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ராமநாதசுவாமி கோவிலின் கிழக்கு கோபுர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தினைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

ஒரு மாதத்திற்கு பிறகு ஒருநாள் முழுவதும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு பெற்றதில் ஒரு கோடியே முப்பத்தி ஐந்து லட்சத்து பதினொராயித்தி எண்ணூறு ரூபாய் பணமும், 77 கிராம் 500 மில்லி தங்கமும், 4 கிலோ 105 கிராம் வெள்ளியும், சில வெளிநாட்டு பணங்களும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு

காயலான் கடை போல் காட்சியளிக்கும் அரசு பொது மருத்துவமனை