ராமோஜி ராவ் பிலிம் சிட்டி அதிபர் ராமோஜி ராவ் மறைவு
தெலங்கானா ராமோஜி ராவ் பிலிம் சிட்டி மற்றும் ETV நிறுவனத்தின் அதிபரான ராமோஜி உடல் நல குறைவால் காலமானார்.
ஆரம்பத்தில் தெலுங்கானாவின் ராமோஜிராவ் ஒரு பத்திரிக்கையை நடத்தி வந்தார் பிறகு ETV தொலைக்காட்சியை உருவாக்கியவர் தெலுங்கு நடிகர்கள் சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு படப்பிடிப்பிற்கு ஏன் செல்ல வேண்டும் என நினைத்து தனக்கு சொந்தமான நிலத்தை நிலத்தில் உலகளவில் மிகப்பெரிய ஃபிலிம் cityயை ஹைதராபாத்தில் உருவாக்கினார்.
பெரிய பேனர் படங்கள் எல்லாம் இவரது ஃபிலிம் சிட்டியில் உருவானதுதான். தெலுங்கு படங்கள் மட்டுமல்ல ஏராளமான தமிழ் படங்களும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உருவாக்கப்பட்டது.
ஸ்டூடியோ மட்டுமல்ல ETV தொலைக்காட்சியை, திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான உஷா கிரண் மூவீஸ் ஆகியவற்றையும் வெற்றி கரமாக நடத்தி வரும் ராமோஜிராவ் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி என்று காலை நாலு மணி அளவில் மறைந்தார்.
இவருக்கு வயது 87 இவரது மரணத்திற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்திய நிலையில் இவரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எக்ஸ் தலத்தில் தெரிவித்துள்ளதாவது எனது வழிகாட்டியும் நலம் விரும்பியுமான ராமோஜி அவர்கள் மறைவை கேட்டு நான் மிகவும் வருந்தினேன்.
சினிமா துறையில் சரித்திரம் படைத்தது அல்லாமல் அரசியலில் கிங்மேக்கராக திகழ்ந்த ராமோஜி என் வாழ்க்கையில் வழிக்காட்டியாக இருந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் ஆன்மா சாந்தியடைய பிராதிக்கிறேன் என்று வருத்ததுடன் பதிவிட்டுள்ளார்.