புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் ரம்ஜான் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் ரம்ஜான் தொழுகை. ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு.
நாடு முழுவதும் ரமளான் மாதம் முழுவதும் நோன்பிருந்து இன்றைய தினம் ஈதுல் ஃபித்ரு எனப்படும் ஈகைத்திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏழைகளும் பசியின்றி இப்பண்டிகையை சந்தோசத்தோடு கொண்டாட வேண்டி தொழுகைக்கு முன்னரே பெருநாளுக்கான தர்மமாகிய பித்ராவை நிறைவேற்றி, இறைவனிடம் அனைவரின் நலத்திற்கும் வளமான, அமைதியான வாழ்க்கைக்காகவும் பிரார்த்திதோம், இன்றைய தினத்தை குடும்பத்தினர். நண்பர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாட கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாவட்டம் சார்பாக ஈகைத்திருநாள் திடல் தொழுகை புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் கலந்து கொண்டு தங்களின் பெருநாள் தொழுகையை நபிவழியில் நிறைவேற்றினர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பாக சுமார் 6 இடங்களில் இன்று பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.
பெருந்திரளாக கூடிய மக்கள் ஒரு மாதம் நோன்பிருந்து இன்றைய தினத்தில் இந்த பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர் ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.