ஸ்ரீரங்கத்தில் ராப்பத்து உற்சவம்.. ஆழ்வார் மோட்சம் நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 30ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அதற்கு அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.பகல்பத்து திருநாள் கடந்த 09ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையடுத்து ராப்பத்து விழா கடந்த 10.01.2025 ம் தேதி, விழாவின் முதல் நாளன்று பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
(ராப்பத்து விழாவின் ஒவ்வொரு நாளும் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது) வைகுண்ட ஏகாதசி ராப்பத்து விழாவின் 10ம் நாளான (20.01.2025) நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவமானது வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை 6 மணிக்கு நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்து வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு நடைபெற்றது..