in

தேசிய விளம்பர தூதராக ராஷ்மிகா நியமிக்கப்பட்டார்


Watch – YouTube Click

தேசிய விளம்பர தூதராக ராஷ்மிகா நியமிக்கப்பட்டார்

விபத்துக்கு பிறகு ராஷ்மிகாமந்தனா படப்பிடிப்புகலில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் தமிழில் சுல்தான், வாரிசு என்ற படங்களில் நடித்தவர். அதன் பிறகு தமிழ் பக்கம் வராமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் செம்ம பிஸி.

ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியிட்ட ரசிகர் மீது தைரியமாக போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்தார். ஓடி ஒளியாமல் அந்த நபரையும் போலீசார் கைது செய்த பின்னர் தொடர்ந்து அவரது வீடியோக்கள் வெளியான போதும் அதைப் பற்றி கவலை படாமல் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

இவரது புஷ்பா 2 டிசம்பர் மாதம் ரிலீஸ்…இக்கு ரெடி..யாகிவிட்டது . தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் ஆக்‌ஷன் படத்தில் ராஷ்மிகா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தேசிய விளம்பர தூதராக மத்திய உள்துறை அமைச்சகம் ராஷ்மிகா…வை நியமித்து இருக்கிறது. இது குறித்து வீடியோ வெளியிட்ட ராஷ்மிகா தனி நபர்கள், வர்த்தகங்கள், சமூகங்களை பாதிக்கும் ஆபத்தான அச்சுறுத்தலால் நான் அதிகம் பாதிக்கப்பட்டேன். இது தொடர்பான விழிப்புணர்வையும் மற்றவர்கள் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளையும் நிச்சயம் மக்களிடம் முறையாக கொண்டு சேர்ப்பேன்.

மேலும் இணையத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க அனைவரும் இணைந்து போராட வேண்டும். எனது வீடியோ இணையத்தில் வந்த போது அதற்கு எதிராக நான் போராட முடிவு எடுத்தேன் மத்திய அரசிடம் இருந்து எனக்கு கிடைத்த ஆதரவுக்கும் நன்றி.

நாம் எப்பொழுதும் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் நிச்சயம் நான் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி சமுகத்தை நல்வழிபடுத்துவேன் என்று மந்தனா கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

முழு…வீடியோ…வையும் போடலாமே ஓவியாவை நக்கல் பண்ணிய ரசிகர்

கைலாசாவில் இருக்கும் ரஞ்சிதா..வை பற்றி தந்தை கூறியது என்ன? பரபரப்பு பேட்டி