சினிமாவை விட்டு விலகினால் சந்தோஷம்… ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா ஹிந்தியில் நடித்த அனிமல் படம் பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் படம் வசூல் சாதனை படைத்தது.
தற்பொழுது ராஷ்மிகா மந்தனா, சாவா என்ற ஹிந்தி படத்தில் நடிக்கிறார். அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில் சத்ரபதி சிவாஜியின் மகனான சத்ரபதி சாம்பிராஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சத்ரபதி ராஜாவின் மனைவியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இப்படத்தை லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ளார் இப்படதின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா கூறுகையில் சாவா படத்தில் மராட்டிய ராணி யேசுபாய் போன்சலேவாக நடித்ததில் தனது மிகுந்த மகிழ்ச்சியையும் மரியாதையையும் கிடைத்தது.
இந்த ஒரு படம் போதும் இந்த படத்தோடு நான் சினிமாவை விட்டு விலகினாலும் எனக்கு சந்தோஷம்தான் இதை நான் இயக்குனரிடமே சொல்லிவிட்டேன் அந்த அளவிற்கு என் வாழ்நாளில் மிகவும் விரும்பப்பட்ட, படமாக சாவா அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.